மோட்டார் சைக்கிள்- சைக்கிள் மோதல்; 2 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள்- சைக்கிள் மோதல்; 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள்- சைக்கிள் மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவாரூர்

திருமக்கோட்டை அருகே உள்ள ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது55). விவசாய தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு பைங்காநாடு பகுதியில் மளிகை பொருட்கள் வாங்கி விட்டு சைக்கிளில் ராஜகோபாலபுரம் நார்த்த வாய்க்கால் பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது பாவாஜிக்கோட்டை கீழத்தெருவை சேர்ந்த ஆனந்தகுமார் (22) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், சக்திவேல் சென்ற சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். தலை மற்றும் காலில் படுகாயம் அடைந்த சக்திவேல் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனந்தகுமார் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story