வாய்க்காலில் கார் பாய்ந்தது; ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் உயிர் தப்பினர்

வாய்க்காலில் கார் பாய்ந்தது; ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 9 Nov 2022 12:30 AM IST (Updated: 9 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

பேரளம் அருகே வாய்க்காலில் கார் பாய்ந்தது. ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் உள்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.

திருவாரூர்

பேரளம் அருகே வாய்க்காலில் கார் பாய்ந்தது. ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் உள்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.

வாய்க்காலில் கார் பாய்ந்தது

திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நோக்கி ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் ராமமூர்த்தி, வீரப்பன் ஆகியோர் நேற்று ஒரு காரில் சென்று கொண்டு இருந்தனர். அந்த காரை திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி பகுதியை சேர்ந்த சாதிக்பாஷா (வயது46) என்பவர் ஓட்டினார்.

திருவாரூர்-மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் நன்னிலம் அருகே பேரளம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக உள்ள வாய்க்காலில் பாய்ந்தது.

3 பேர் உயிர் தப்பினர்

இந்த விபத்தில் காரில் பயணித்த ராமமூர்த்தி, வீரப்பன் மற்றும் டிரைவர் சாதிக்பாஷா ஆகிய 3 பேரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பினர்.

இதுதொடர்பாக பேரளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story