ஆத்தூர் அருகே வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; டிராக்டர் டிரைவர் படுகாயம்
ஆத்தூர் அருகே வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் டிராக்டர் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
சேலம்
ஆத்தூர்:
கோவையில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று சென்னையை நோக்கி சென்றது. ஆத்தூர் புறவழிச்சாலையில் சென்ற போது அந்த வழியாக சேலத்தை நோக்கி வந்த டிராக்டரும், கன்டெய்னர் லாரியும் மோதிக்கொண்டன. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த கார் மீது கன்டெய்னர் லாரி மோதியது. இதில் டிராக்டர், கார் 2 வாகனங்களும் பலத்த சேதம் அடைந்தன. லாரியும் சேதம் அடைந்தது. அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேதமடைந்த டிராக்டரை, பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் டிராக்டர் ஓட்டி வந்த ரங்கராஜன் (வயது 54) என்பவர் காயம் அடைந்தார். சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த காரில் ஆட்கள் யாரும் இல்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
Related Tags :
Next Story