சாலையில் சுற்றும் மாடுகளால் விபத்து அபாயம்


சாலையில் சுற்றும் மாடுகளால் விபத்து அபாயம்
x
தினத்தந்தி 22 Nov 2022 6:45 PM GMT (Updated: 22 Nov 2022 6:46 PM GMT)

சாலையில் சுற்றும் மாடுகளால் விபத்து அபாயம் உள்ளது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளில் பசுமாடுகள், ஆடுகள் மற்றும் நாய்கள் போன்ற கால்நடைகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சிரமமாக உள்ளது. குறிப்பாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. சில நேரங்களில் வாகனங்களில் சிக்கி கால்நடைகளும் உயிரிழக்கின்றன. இதுகுறித்து பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறினர். இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத்திடம் கேட்டபோது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படும் என அவர் கூறினார். எனவே கால்நடைகள் வளர்ப்போர் தெருக்களில் ஆடு, மாடுகளை அவிழ்த்து விடுவதை தவிர்த்து தங்கள் வீட்டிலேயே வளர்க்கும் படி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story