பல்லடம் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

பல்லடம் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
x

பல்லடம் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

திருப்பூர்

பல்லடம்

பல்லடம் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

இந்த விபத்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொழிலாளி

கோவை லட்சுமிபுரத்தை சேர்ந்த மாதவன் மகன் நாகராஜ் (வயது37). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று இவரது உறவினர் பாலசுப்பிரமணியத்துடன் (56) ஸ்கூட்டரில் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

நாகராஜ் ஸ்கூட்டரை ஓட்டினார். பின் இருக்கையில் பாலசுப்பிரமணியம் அமர்ந்து இருந்தார். இவர்களது ஸ்கூட்டர் பல்லடத்தில் உள்ள நால்ரோடு சிக்னல் வந்தது. அப்போது டேங்கர் லாரி ஒன்று இவர்களை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியது.

பலி

இதில் நிலை தடுமாறி ரோட்டில் விழுந்த நாகராஜ் மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலசுப்பிரமணியம் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். அவருக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story