மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் விதை நெல் பண்ணை உரிமையாளர் பலி


மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் விதை நெல் பண்ணை உரிமையாளர் பலி
x

தாராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் விதை நெல் பண்ணை உரிமையாளர் பலியானார்.

திருப்பூர்

தாராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் விதை நெல் பண்ணை உரிமையாளர் பலியானார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விதை நெல் நிறுவன உரிமையாளர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குமார பாளையம் பகுதியை சேர்ந்தவர் பி.முருகேஷ்(வயது52) விதை நெல் பண்ணை உரிமையாளர். இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மோட்டார் சைக்கிளில் தாராபுரத்தில் இருந்து வீட்டுக்கு தாராபுரம் -திருப்பூர் சாலையில் ஐ.டி.ஐ. அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது தாராபுரத்தில் இருந்தது திருப்பூர் நோக்கி வந்த ஒரு வேன் முருகேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் வந்து இடித்து மோதி தள்ளியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து முருகேஷ் நிலை தடுமாறி சாலையில் விழுந்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி சாவு

அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் விபத்து குறித்து ஆம்லன்சுக்கு போன் செய்தனர். ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் முருகேஷ் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story