ஒகேனக்கல் மடம் செக்போஸ்ட் அருகேசுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
பென்னாகரம்:
ஒகேனக்கல் மடம் செக்போஸ்ட் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சுற்றுலா பயணிகள்
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
இதன்படி திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர் ஒரு வேனில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். அங்கு அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிபார்த்து விட்டு பின்னர் மாலை 5 மணி அளவில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
பரபரப்பு
அப்போது ஒகேனக்கல் மடம் செக்போஸ்ட் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வேனில் இருந்த 17 பேரும் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.
இதையடுத்து மற்றொரு வேனை ஏற்பாடு செய்து அனைவரும் புறப்பட்டு சென்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.