சேலத்தில் அதிகாலை விபத்து: கார் கவிழ்ந்து முருக பக்தர் பலி-5 பேர் படுகாயம்


சேலத்தில் அதிகாலை விபத்து: கார் கவிழ்ந்து முருக பக்தர் பலி-5 பேர் படுகாயம்
x

சேலத்தில் அதிகாலை கார் கவிழ்ந்த விபத்தில் முருக பக்தர் பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

சேலம்

சூரமங்கலம்:

முருக பக்தர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள பெத்தாம்பட்டியை சேர்ந்தவர் சங்கப்பன் (வயது 43). முருக பக்தரான இவர், பேன்சி கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் சங்கப்பன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது உறவினர்களுடன் முருகனின் அறுபடை வீடுகளுக்கு காரில் சென்றார்.

அவர்கள் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, சேலம் வழியாக திருப்பூருக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை முருகேசன் என்பவர் ஓட்டி சென்றார்.

கார் கவிழ்ந்தது

இந்த கார் சேலம் மாமாங்கம் பகுதியில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறக ஓடியது. பின்னர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி சங்கப்பன், முருகேசன், கோபால், மாரிமுத்து, பழனிமுத்து, கார்த்திக் ஆகியோர் படுகாயம் அடைந்து அலறினர்.

அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடைக்காரர் பலி

ஆனால் சிகிச்சை பலனின்றி பேன்சி கடைக்காரர் சங்கப்பன் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். சூரமங்கலம் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காரை ஓட்டி சென்ற முருகேசன் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நடந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story