சங்ககிரி அருகே நடுரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து; டிரைவர் காயம்-கற்கள் கொட்டியதால் போக்குவரத்து பாதிப்பு


சங்ககிரி அருகே நடுரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து; டிரைவர் காயம்-கற்கள் கொட்டியதால் போக்குவரத்து பாதிப்பு
x

சங்ககிரி அருகே நடுரோட்டில் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் காயம் அடைந்தார். லாரியில் இருந்த கற்கள் சாலையில் கொட்டியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேலம்

சங்ககிரி:

எடப்பாடி வெள்ளாடிவலசு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 47). டிப்பர் லாரி டிரைவர். இவர் எடப்பாடியில் இருந்து வெள்ளைக்கல் (சுண்ணாம்புக்கல்) பாரம் டிப்பர் லாரியில் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம் பச்சாம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். சங்ககிரி அருகே சின்னாகவுண்டனூர் முனியப்பன் கோவில் அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது டிப்பர் லாரி டயர் திடீரென வெடித்தது. இதனால் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் ரோட்டில் கற்கள் கொட்டியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் லாரி டிரைவர் லோகநாதன் காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story