மோட்டார்சைக்கிள்கள் மோதல்; 4 பேர் படுகாயம்


மோட்டார்சைக்கிள்கள் மோதல்; 4 பேர் படுகாயம்
x

மோட்டார்சைக்கிள்கள் மோதி 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரை

பேரையூரை சேர்ந்தவர் மலைராஜன் (வயது 47). இவர் மோட்டார்சைக்கிளில் டீ விற்று வருகிறார். நேற்று மாலை மலைராஜன் டி.கல்லுப்பட்டி-பேரையூர் சாலையில் மோட்டார்சைக்கிளில் வரும்போது, எதிரே வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் மலைராஜன் மற்றும் அம்மாபட்டியை சேர்ந்த ராமராஜ் (46), அரச பட்டியை சேர்ந்த சூர்யா (45), கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரங்கநாதன் (45) ஆகியோர் படுகாயம் அடைந்து, சிகிச்சைக்காக பேரையூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story