மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் போக்குவரத்து போலீஸ்காரர் பலி


மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் போக்குவரத்து போலீஸ்காரர் பலி
x

பல்லடத்தில் மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் போக்குவரத்து போலீஸ்காரர் பலியானார்.

திருப்பூர்

பல்லடத்தில் மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் போக்குவரத்து போலீஸ்காரர் பலியானார்.

இது பற்றி ேபாலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போக்குவரத்து போலீஸ்காரர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த அழகர்சாமி என்பவரது மகன் ராதா (வயது 35). பல்லடம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று காலை பணிக்கு செல்வதற்காக, மோட்டார் சைக்கிளில் பல்லடம் மங்கலம் ரோட்டில் இருந்து நால்ரோடு வழியாக கோவை ரோட்டிற்கு செல்ல முற்பட்டார்.

சரக்கு வாகனம் மோதல்

அப்போது, கோவை ரோட்டில் வந்த சிறிய ரக சரக்கு வேன், எதிர்பாராதவிதமாக போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் ராதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக, கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி போலீஸ்காரர் ராதா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விபத்தில் இறந்த ராதாவிற்கு, ராஜ கங்கா என்ற மனைவியும் 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

அஞ்சலி

போலீஸ்காரர் ராதாவின் உடலுக்கு திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மேலும் இறுதிச்சடங்கில் உயரதிகாரிகள், வக்கீல்கள், போலீசார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Related Tags :
Next Story