பஸ் மோதி முதியவர் சாவு


பஸ் மோதி முதியவர் சாவு
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:47 PM IST)
t-max-icont-min-icon

பஸ் மோதி முதியவர் உயிரிழந்தார்.

மதுரை

மதுரை காமராஜர்சாலை பகுதியை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 60). இவர் அண்ணாபஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் கதிரேசன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கதிரேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அரசு பஸ் டிரைவர் மகேந்திரபாண்டியன் (42) மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story