பாலம் கட்ட தோண்டப்பட்ட குழியில் தலை குப்புற கார் கவிழ்ந்தது; அரசு ஆஸ்பத்திரி டாக்டர் உயிர் தப்பினார்

பாலம் கட்ட தோண்டப்பட்ட குழியில் தலை குப்புற கார் கவிழ்ந்தது; அரசு ஆஸ்பத்திரி டாக்டர் உயிர் தப்பினார்
x

பாலம் கட்ட தோண்டப்பட்ட குழியில் தலை குப்புற கார் கவிழ்ந்தது; அரசு ஆஸ்பத்திரி டாக்டர் உயிர் தப்பினார்

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே உள்ள உடையாக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மருந்துகள் வாங்குவதற்காக செந்தில்குமார் காரில் கோபிக்கு சென்றுகொண்டு இருந்தார். நம்பியூர்-கோபி ரோட்டில் ஒட்டர்கரட்டுப்பாளையம் என்ற இடத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதற்காக அங்கு பெரிய குழி தோண்டப்பட்டு இருந்தது.

கார் ஒட்டர்கரட்டுப்பாளையம் சென்றபோது திடீரென நிலை தடுமாறி பாலத்துக்காக தோண்டப்பட்ட குழியில் இறங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் குழிக்குள் இறங்கி காருக்குள் இருந்த செந்தில்குமாரை மீட்டு வெளியே கொண்டு வந்தார்கள். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story