மொபட் மீது கார் மோதல்; முதியவர் பலி


மொபட் மீது கார் மோதல்; முதியவர் பலி
x
தினத்தந்தி 24 April 2023 2:30 AM IST (Updated: 24 April 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

எரியோடு அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.

எரியோடு அருகே உள்ள கோ.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 82). விவசாய கூலித்தொழிலாளி. நேற்று காலை இவர், தனது மொபட்டில் பெட்ரோல் நிரப்புவதற்காக கோவிலூர்-திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வந்தார். அங்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு தனது வீட்டுக்கு புறப்பட்டார். பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து சாலையை அவர் கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வடமதுரையில் இருந்து கரூர் நோக்கி சென்ற கார் ஒன்று மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த விஜயராகவன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் விபத்தில் சிக்கியதை பார்த்த அக்கம்பக்கத்தினர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதாக கூறப்படுகிறது. இதனால் அந்த முதியவர் இறந்ததாக அக்கம்பக்கத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். பின்னர் விஜயராகவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரை ஓட்டி வந்த வடமதுரையை சேர்ந்த அழகுமூர்த்தி (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story