விபத்தில் 2 பேர் பலி


விபத்தில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 1 May 2023 6:45 PM GMT (Updated: 1 May 2023 6:46 PM GMT)

முதுகுளத்தூர் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது..

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது..

மோட்டார்சைக்கிள் மோதல்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரித்வி ராஜன்(வயது 48).

இவர் முதுகுளத்தூரில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று அதிகாலையில் வழக்கம்போல் விளங்குளத்தூரில் இருந்து முதுகுளத்தூருக்கு வேலைக்காக தனது மோட்டார்சைக்கிளில் சென்றார்.

அதே கிராமத்தை சேர்ந்த குண்டு(63) என்பவர் டீக்கடையில் டீ குடித்துவிட்டு மெயின் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டில் வந்தபோது, பிரித்விராஜன் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள், எதிர்பாராதவிதமாக குண்டு மீது மோதியது.

2 பேர் சாவு

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பிரித்வி ராஜனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் குண்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story