டயர் வெடித்து சரக்கு வாகனம் கவிழ்ந்தது
டயர் வெடித்து சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்
தேவகோட்டை, மே.10-
புதுக்கோட்டை மாவட்டம் குடிமியான்மலையிலிருந்து 8 பேருடன் சிமெண்டு கிராதி ஏற்றிக்கொண்டு தேவகோட்டை அருகே உள்ள கோடிகோட்டை என்ற இடத்திற்கு சரக்கு வாகனம் சென்றது. திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் தேவகோட்டை அருகே உள்ள உதையாட்சி என்ற இடத்தில் சென்ற போது திடீரென வாகனத்தின் டயர் வெடித்தது. இதில் சரக்கு வாகனம் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சுப்பிரமணியன் (வயது 21), சுந்தர் (21), முத்துக்குமார் (20), சொர்ணராஜ் (27), விஜய குமார் (26), சோலை முத்து (21) ஆகிய 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்