விபத்தில் கருவூல ஊழியர் பலி
விபத்தில் கருவூல ஊழியர் பலியானார்.
ராமநாதபுரம்
தொண்டி,
முதுகுளத்தூர் அருகே உள்ள வடக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரகுமார் (வயது 37). இவர் திருவாடானை பாரதி நகரில் வசித்து வந்தார். இவர் ராமநாதபுரம் கருவூலத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று திருவாடானையை அடுத்த கற்காத்தக்குடி கிராமத்தின் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாடானை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே நாகேந்திரகுமார் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story