தொப்பூர் கணவாயில்லாரி, பஸ், 2 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து3 பேர் காயம்


தொப்பூர் கணவாயில்லாரி, பஸ், 2 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து3 பேர் காயம்
x
தர்மபுரி

தர்மபுரி

தொப்பூர் கணவாயில் லாரி, தனியார் பஸ் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.

வாகனங்கள் மோதி விபத்து

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் நேற்று ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியும், அந்த சாலையில் சென்ற தனியார் பஸ் மற்றும் 2 கார்களும் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார்கள் சேதம் அடைந்தன.

காரில் சென்ற சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ் (வயது 30), கலைபிரியா (25) உள்ளிட்ட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், சுங்கச்சாவடி ரோந்து படையினர் விபத்துக்குள்ளான லாரி மற்றும் 2 கார்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story