வெவ்வேறு இடங்களில் விபத்து கார் மெக்கானிக் உள்பட 2 பேர் சாவு 4 பேர் காயம்


வெவ்வேறு இடங்களில் விபத்து  கார் மெக்கானிக் உள்பட 2 பேர் சாவு  4 பேர் காயம்
x

கார் மெக்கானிக் உள்பட 2 பேர் சாவு

ஈரோடு

வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் கார் மெக்கானிக் உள்பட 2 பேர் பலி ஆனார்கள். இதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

கார் மெக்கானிக்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 28). கார் மெக்கானிக். இவர் பெருந்துறையில் கோைவ ரோட்டில் உள்ள ஒரு கார் ெமக்கானிக் ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவருடன் நசியனூரை சேர்ந்த கார்த்திகேயன் (29), ஈரோட்டை சேர்ந்த சுரேஷ்குமார் (34), மணிவண்ணன் (27) ஆகியோரும் வேலை செய்து வருகிறார்கள்.

இவர்களுடைய ஒர்க்ஷாப்புக்கு பழுது பார்ப்பதற்காக கார் ஒன்று வந்தது. காரை பழுது பார்த்த பின்னர் நந்தகுமார், கார்த்திகேயன், சுரேஷ்குமார், மணிவண்ணன் ஆகியோர் ஓட்டி பார்ப்பதற்காக கோவை ரோட்டில் விஜயமங்கலத்தை நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்றனர். காரை நந்தகுமார் ஓட்டினார். மற்ற 3 பேரும் காரில் உட்கார்ந்திருந்தனர்.

சாவு

பெருந்துறை சிப்காட் நுழைவு வாயில் அருகே சென்ற போது, அங்கே ரோட்டோரம் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே நந்தகுமார் உயிரிழந்தார். கார்த்திகேயன், சுரேஷ்குமார், மணிவண்ணன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். உடனே அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி அருகே உள்ள காகம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (48). இவர் ஈரோட்டில் உள்ள பர்னிச்சர் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு ஈரோட்டில் இருந்து மொடக்குறிச்சி நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். ஈரோட்டை அடுத்த கருந்தேவன்பாளையம் அருகே சென்றபோது அங்குள்ள ரோட்டை 60 வயது மூதாட்டி கடக்க முயன்றார். இதில் எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது சந்திரசேகரின் மோட்டார்சைக்கிள் மோதியது.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து சந்திரசேகரன் கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூதாட்டியும் காயம் அடைந்தார். உடனே அந்த மூதாட்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்திரசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story