மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து கோவில் பணியாளர் சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து கோவில் பணியாளர் சாவு
x

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து கோவில் பணியாளர் இறந்தார்.

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை அருகே உள்ள மலையர்நத்தம் கிராமம், குடியானத் தெருவை சேர்ந்தவர் கமலநாதன் (வயது38). இவர் பாபநாசம் அருகே உள்ள திருகருகாவூர் கோவிலில் கணினி பிரிவில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு கமலநாதன் பணியை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் மலையர் நத்தம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கொருக்கப்பட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி சாலையில் விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story