டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் சாவு


டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 24 Jan 2023 7:15 PM GMT (Updated: 2023-01-25T00:45:19+05:30)

டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் சாவு

நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது33). இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் பழங்கள்ளிமேடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விஜயகுமார் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வேட்டைக்காரனிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story