சாலையில் திரியும் மாடுகளால் விபத்து


சாலையில் திரியும் மாடுகளால் விபத்து
x
தினத்தந்தி 24 July 2023 12:22 AM IST (Updated: 25 July 2023 5:28 PM IST)
t-max-icont-min-icon

சாலையில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை

வாலாஜா போலீஸ் குடியிருப்பு பகுதி முதல் அம்மூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தென்றல் குடியிருப்பு பஸ் நிறுத்தம் வரை தினமும் ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. மாடுகள் திடீரென சாலையில் திரும்பும்போதும், சாலையை கடக்கும்போதும் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகிறார்கள். நகராட்சி அதிகாரிகள் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story