லாரி மீது மொபட் மோதி விபத்து; அரசு ஊழியர் சிகிச்சை பலனின்றி சாவு


லாரி மீது மொபட் மோதி விபத்து; அரசு ஊழியர் சிகிச்சை பலனின்றி சாவு
x

லாரி மீது மொபட் மோதியதில் அரசு ஊழியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர்

அரசு ஊழியர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நக்கசேலம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). இவர் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியரின் ஜீப் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 15-ந்தேதி வேலை முடிந்து வழக்கம் போல் இரவில் வீட்டிற்கு சரவணன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பெரம்பலூர்-துறையூர் சாலையில் மங்கூனுக்கும், நக்கசேலத்திற்கும் இடையே மட்டப்பாறையில் சென்று கொண்டிருந்த போது சரவணனின் கட்டுப்பாட்டை இழந்த மொபட் முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

சிகிச்சை பலனின்றி சாவு

இதில் படுகாயமடைந்த சரவணனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இந்தநிலையில், உயர் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சரவணனை ஆம்புலன்சில் அழைத்து சென்ற போது, செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனை பிரேத கூடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்த சரவணனுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த விபத்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story