எருமப்பட்டி அருகே கார்- மொபட் மோதல்; தொழிலாளி பலி 4 பேர் காயம்
எருமப்பட்டி அருகே கார்- மொட் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர்.
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே கார்- மொட் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர்.
சாமி தரிசனம்
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள ஈச்சவாரியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மகன் விஜயகுமார் (வயது 26). இவரும், நாமக்கல் அருகே அண்ணா நகர் பட்டறை மேட்டை சேர்ந்த ராஜேஷ் கண்ணா (46), இவருடைய மனைவி கிருத்திகா (39) ஆகியோருடன் காரில் சிதம்பரம் சென்றனர். பின்னர் அங்குள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எருமப்பட்டி அருகே உள்ள கருப்பனார் கோவில் பகுதியில் வந்தபோது, எதிரே எருமப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளர்களான கிருஷ்ணன் (59), சிங்களங்கோம்பையை சேர்ந்த வீரமலை (60) ஆகியோர் ஒரு மொபட்டில் வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக காரும், மொபட்டும் மோதி விபத்துக்குள்ளானது.
விசாரணை
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த கிருஷ்ணன், வீரமலையை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்த காரில் வந்த ராஜேஷ் கண்ணா, கிருத்திகா, விஜயகுமார் ஆகியோரும் மீட்கப்பட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் கிருஷ்ணன் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஷ்ணன் இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.