அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால் அதிகரிக்கும் விபத்துகள்
தலைக்குந்தா-ஏக்குனி சாலையில்அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால் விபத்துகள் அதிகரிக்கிறது.
ஊட்டி
ஊட்டியை அடுத்த மசினகுடி பகுதியில் பல்வேறு தனியார் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தங்கும் சுற்றுலா பயணிகள் ஜீப்பில் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க அழைத்து செல்லப்படுகின்றனர். இந்தநிலையில் கல்லட்டி சாலையில் தலைக்குந்தா-ஏக்குனி இடையே அதிக விபத்துகள் நடப்பதால், ஊட்டியில் இருந்து மசினகுடிக்கு செல்லும் வாகனங்கள் இடதுபுறமும், மசினகுடியில் இருந்து ஊட்டிக்கு வரும் வாகனங்கள் வலது புறமும் செல்லும் வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஒருசில ஜீப்கள் சுற்றுலா பயணிகளை அழைத்துக்கொண்டு போட்டி போட்டு கொண்டு விதிமுறையை பின்பற்றாமல் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் ஜீப்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே விதிகளை மீறி இயக்கப்படும் ஜீப்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.