மோட்டார்சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி
மோட்டார்சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி
குண்டடம் அடுத்த நல்லிபாளையத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 55). இவரும் இவரது உறவினர் சடையபாளையத்தை சேர்ந்த கருணாகரன்(55) ஆகிய இருவரும் சம்பவத்தன்று உப்பாறு அணையில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் பணப்பாளையம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பனைமரத்துபாளையம் பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவர் பனமரத்துப்பாளையம் அருகே பிரிந்து செல்லும் சாலையிலிருந்து தாராபுரம் செல்லும் சாலைக்கு மற்றொரு மோட்டார்சைக்கிளில் திடீரென உள்ளே வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 2 மோட்டார்சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த வேலுச்சாமியை கோவை தனியார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த கருணாகரன் மற்றும் குப்புசாமி ஆகியோருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.