கோழிக்கடைக்குள் கார் புகுந்து தனியார் நிதி நிறுவன மேலாளர் பலி
தாராபுரம் அருகே கோழிக்கடைக்குள் கார் புகுந்த விபத்தில் தனியார் நிதி நிறுவன மேலாளர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தனியார் நிதி நிறுவன மேலாளர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வடதாரை பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் பிரகாஷ் (வயது 36). இவர் உடுமலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய உறவினரான தமிழரசன் (39) என்பவர் உடுமலை-தாராபுரம் சாலையில் கொண்டரசம்பாளையம் பகுதியில் கோழிக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழரசன் மற்றும் கறிக்கடையில் வேலைபார்க்கும் மிதுன்பாலாஜி (17) ஆகியோர் கறிக்கடையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களுடன் பிரகாஷ் பேசிக்ெகாண்டிருந்தார்.
கடைக்குள் கார் புகுந்தது
அப்போது தாராபுரம்-உடுமலை சாலையில் தாராபுரம் நோக்கி கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த காரை ஊத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜ் என்கிற செல்வராஜ் (42) ஓட்டி வந்தார். அந்த கார் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கொண்டரம்பாளையம் பகுதியை சேர்ந்த அருணகிரி (55) என்பவர் மீது மோதியது. அதன் பின்னர் கார் நிற்காமல் ஓடி சாலையோர கோழிக்கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் கறிக்கடையில் நின்று ெகாண்டிருந்த பிரகாஷ், தமிழரசன், மிதுன்பாலாஜி, மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த அருணகிரி, கார்கோழிக்கடைக்குள் கார் புகுந்து
தனியார் நிதி நிறுவன மேலாளர் பலி டிரைவர் செல்வராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
பலி
உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பிரகாசை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மற்ற 4 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விபத்தில் பலியான பிரகாசுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.