வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு


வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
x

கோப்புப்படம்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், கீழ்ப்பாக்கம் மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் குவித்த வழக்கு தொடர்பாக சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பக முன்னாள் உதவி காசாளர் சத்திய நாராயணனுக்கு 3 ஆண்டுகள் சிறை விதித்து ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அவரது சொத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கை விசாரித்த ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ், சத்தியநாராயணன் வருமானத்துக்கு அதிகமாக 15 லட்சம் ரூபாய் சொத்துகள் சேர்த்தது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மகன் லட்சுமணனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

மற்றொரு மகனான ராமன் பெயரில் உள்ள சொத்துக்கள் அவரது சொந்த வருமானத்தில் வாங்கப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளதாக கூறி, அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். மேலும், லட்சுமணன் பெயரில் உள்ள சொத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story