சிலம்ப போட்டியில் மாணவிகள் சாதனை


சிலம்ப போட்டியில் மாணவிகள் சாதனை
x
தினத்தந்தி 27 Oct 2023 12:15 AM IST (Updated: 27 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிலம்ப போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளி மாணவிகள் சாதனை படைத்து உள்ளனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவ-மாணவிகள் தேனியில் உள்ள கலைக்கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டி மற்றும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் சிலம்பாட்ட போட்டி மற்றும் ஒற்றை கொம்பு, இரட்டைக் கொம்பு, சுருள்வால் சுழற்றுதல் போட்டிகளில் ஜெயஸ்ரீ, குணா, சிவப்பிரியா, ஹர்சவர்த்தினி ஆகியோர் முதல் இடத்தை பிடித்தனர். மேலும் இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த மாணவ- மாணவிகளையும் பாராட்டி சுழற்கேடயம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் குருவலிங்கம், நிர்வாக அதிகாரி அழகர்சாமி சித்ரா, முதல்வர் கமலா ஆதி நாராயணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

1 More update

Related Tags :
Next Story