எறிபந்து போட்டியில் மாணவர்கள் சாதனை


எறிபந்து போட்டியில் மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 11 Aug 2023 6:45 PM GMT (Updated: 11 Aug 2023 6:47 PM GMT)

எறிபந்து போட்டியில் ஆழ்வார்குறிச்சி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

தென்காசி

கடையம்:

தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பாவூர்சத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான எறிபந்துப் போட்டியில் ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பேடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். குறுவட்ட அளவிலான எறிபந்துப் போட்டியில் முதல் இடத்தை பெற்றதோடு தென்காசி மாவட்ட அளவிலான எறிபந்து போட்டிக்கு தகுதி பெற்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் அந்தோணி பாபு, முதல்வர் ஜோஸ்பின் விமலா, தலைமையாசிரியர் மீராள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் பேச்சிமுத்து, விஷ்ணுபிரியா மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் வாழ்த்திப் பாராட்டினர்.


Next Story