வடக்கன்குளம் கல்லூரி மாணவிகள் சாதனை


வடக்கன்குளம் கல்லூரி மாணவிகள் சாதனை
x

கலை மற்றும் கலாசார போட்டிகளில் வடக்கன்குளம் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்தனர்.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் செயின்ட் அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான கலை மற்றும் கலாசார போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் 25 கல்லூரிகளில் இருந்து மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. சகாயத்தாய் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவிகள் பல போட்டிகளில் பரிசுகளை வென்று சாதனை படைத்தனர். ஒட்டுமொத்தமாக 2-ம் இடத்தை பிடித்து அசத்தினர். வெற்றி பெற்ற மாணவிகளையும், உறுதுணையாக இருந்து பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் கல்லூரி செயலாளர் ம.கிரகாம் பெல், இயக்குனர் ம.திவாகரன், அவரது துணைவியார் செல்வி திவாகரன், கல்லூரி முதல்வர் எஸ்.சுஜாதா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

1 More update

Next Story