மாவட்டம் முழுவதும்மது, புகையிலை பொருட்கள்விற்ற 56 பேர் கைது:சூதாடிய 23 பேரும் சிக்கினர்


மாவட்டம் முழுவதும்மது, புகையிலை பொருட்கள்விற்ற 56 பேர் கைது:சூதாடிய 23 பேரும் சிக்கினர்
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய தீவிர ரோந்து பணியின் போது, மது, புகையிலை பொருட்கள் விற்ற 56 பேரும், சூதாடிய 23 பேரும் கைது செய்யப்பட்டனர்.

தேனி

மதுவிற்ற 43 பேர் கைது

தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை போன்றவற்றை தடுக்க போலீசார் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் தொடர்கதையாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இதுபோன்ற செயல்களை தடுக்க தீவிர ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கும் போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார்.

அதன்பேரில், தேனி மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை முதல் நள்ளிரவு வரை தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். அப்போது தேனி காட்டுபத்திரகாளியம்மன் கோவில் அருகில் மதுவிற்ற கம்பத்தை சேர்ந்த மனோகரன் (வயது 60), வாழையாத்துப்பட்டியில் மதுவிற்ற பூதிப்புரத்தை சேர்ந்த தங்கபாண்டி (27) ஆகியோர் உள்பட மாவட்டம் முழுவதும் 43 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 278 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புகையிலை பொருட்கள்

இதேபோல், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக மாவட்டம் முழுவதும் 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 270 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசார் நடத்திய ரோந்து பணியின் போது, சில இடங்களில் பணம் வைத்து சூதாட்டம் நடந்தது தெரியவந்தது. அதன்பேரில், 5 வழக்குகள் போலீசார் பதிவு செய்தனர். அந்த வழக்குகளில் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story