குடும்ப அட்டைதாரர்களிடம் ரேஷன் பொருட்களை விலைக்கு வாங்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை


குடும்ப அட்டைதாரர்களிடம் ரேஷன் பொருட்களை  விலைக்கு வாங்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை
x

தர்மபுரி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களிடம் ரேஷன் பொருட்களை விலைக்கு வாங்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் திவ்யதர்சினி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி

தர்மபுரி:

புழுங்கல் அரிசி

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த மாதம் முதல் புழுங்கல் அரிசி தலா 2 கிலோ வீதம் வழங்க மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு வழங்கப்படுகின்ற பொது வினியோக திட்ட பொருட்களில் எதையாவது பெற விருப்பமில்லை என்றால் அந்த பொருட்களை விட்டு கொடுக்கலாம்.

அவ்வாறு இல்லாமல் பொது வினியோக திட்ட பொருட்களை ரேஷன் கடைகளில் பெற்று 3-ம் நபர்களுக்கு விற்பனை செய்தால் அதுகுறித்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசார் மூலம் விசாரணை நடத்தப்படும். இவர்களுக்கு ரேஷன் பொருட்களை விற்பனை செய்பவர்களின் குடும்ப அட்டைகள் பண்டகமில்லா குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்யப்படும்.

குண்டர் சட்டம்

குடும்ப அட்டைதாரர்களிடம் ரேஷன் பொருட்களை விலைக்கு வாங்கும் வியாபாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல் இருசக்கர வாகனங்கள், லாரிகள், வேன்கள் மூலம் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொதுவினியோக திட்ட பொருட்களை கடத்துபவர்களின் வாகனங்கள் அரசால் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story