பதிவு செய்யப்படாத கிரானைட் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை


கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பதிவு செய்யப்படாத கிரானைட் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகளில், சில தொழிற்சாலைகள் தற்போது வரை கனிம இருப்பு கிடங்கு அமைக்க கலெக்டரிடம் அனுமதி பெற எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது விதிகளின்படி குற்றமாகும். எனவே, தமிழ்நாடு கனிம இருப்பு கிடங்கு விதிகள், 2011-ன் விதி 4-ன்படி கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள், 15 நாட்களுக்குள் விண்ணப்பம் அளித்தவுடன், தங்கள் தொழிற்சாலைகளை பதிவு செய்திட நடவடிக்கை எடுக்க இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. தவறும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தால் மேற்படி தொழிற்சாலைகளின் மின் இணைப்பை துண்டிக்க, மின் வாரியத்தின் மூலம் விதிகளின் படி மேல்நடவடிக்கை தொடரப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story