24 நிறுவனங்கள் மீது நடவடிக்கை


24 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
x

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 24 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் தெரிவித்தனர்.

தர்மபுரி

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் 24 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடாசலபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முரண்பாடுகள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட தொழிலாளர் துறை தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் எனது தலைமையில் பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், ஓட்டல்கள், திரையரங்குகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவற்றில் 4 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 2 மாவட்டங்களிலும் 86 நிறுவனங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது சட்டமுறை எடையளவுச் சட்டம் 2009 மற்றும் சட்டமுறை எடை அளவுகள் (பொட்டலப்பொருட்கள்) விதிகள் 2011-ன் கீழ் 24 நிறுவனங்கள் மீது முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எடை அளவுகள் மற்றும் மின்னணு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்துவது, பொட்டலப் பொருட்கள் அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கூடாது.

அபராதம்

மேலும் உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்யப்படுவது சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் சட்டமுறை எடையளவு பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் தண்டனைக்குரியதாகும். எனவே, ஆய்வின் போது முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story