மண் கடத்தினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
நாமக்கல்
நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மண் வெட்டி எடுப்பவர்கள் மற்றும் மண் கடத்தலில் ஈடுபடுபவர்களை, கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
அவ்வாறு சட்டவிரோதமாக மண்வெட்டி எடுப்பவர்கள் மற்றும் மண் கடத்தலில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story