விடுமுறை அளிக்காத 128 நிறுவனங்கள் மீது நடவடிக்கை


விடுமுறை அளிக்காத 128 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
x

விடுமுறை அளிக்காத 128 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் தலைமையில் தொழிலாளர் துணை மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், தேசிய பண்டிகை விடுமுறை தினமான நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 164 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா். இதில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 128 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இனிவரும் தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும். தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்காமல் தொழிலாளர்களை பணிபுரிய நிர்ப்பந்திக்கும் நிறுவனங்கள் மீது 1958-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை) சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த தகவலை திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தெரிவித்துள்ளார்.


Next Story