கள்ளச்சாராயம், போலி மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
விஷச்சாராயத்துக்கு 22 பேர் பலி
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் விற்கப்பட்ட விஷச்சாராயத்தை பலர் வாங்கி குடித்தனர். இதில் 22 பேர் பலியாகி விட்டனர். இதையடுத்து விஷச்சாராயம் விற்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடும் நடவடிக்கை
இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, கள்ளச்சாராயம், வெளிமாநில மதுபானங்கள், மற்றும் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்த தகவல் தெரிந்தால் பொதுமக்கள் 9080255322 என்ற எண்ணிற்கு அலைபேசி மூலமாகவோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.