மனைவி -தாய் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயி புகார்


மனைவி -தாய் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை  போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயி புகார்
x

விவசாயி புகார்

ஈரோடு

அந்தியூர் அருகே உள்ள சங்கராப்பாளையம் ஆர்.ஜி.கே. புதூர் பகுதியை சேர்ந்த விவசாயி முருகேசன் (வயது 40) என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

எனது மனைவி கிருத்திகா (29) மற்றும் தாய் புஷ்பா ஆகியோர் நேற்று முன்தினம் எனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது எங்கள் பகுதியை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி எனது நிலத்திற்குள் நுழைந்து எனது மனைவி மற்றும் தாயின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து மானபங்கப்படுத்தியதோடு அவர்களை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த இர

ுவரும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே எனது மனைவி மற்றும் தாய் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அந்த கும்பலம் மீது நடவடிக்கை எடுத்து எங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.


Next Story