எருது கட்டும் போட்டி நடத்திய கோவில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை

எருது கட்டும் போட்டி நடத்திய கோவில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை
x

விளாத்திகுளம் அருகே முன் அனுமதி இன்றி எருது கட்டும் போட்டி நடத்திய கோவில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே முன் அனுமதி இன்றி எருது கட்டும் போட்டி நடத்திய கோவில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

எருது கட்டும் போட்டி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் பல்லாக்குளம் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவில் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாக கமிட்டி சார்பில் எந்தவித முன்அனுமதியும் இன்றி கடந்த 13.07.2022 அன்று எருது கட்டும் போட்டி நடத்தப்பட்டு உள்ளது. முன் அனுமதியின்றி நடத்தப்பட்ட எருது கட்டும் போட்டி தொடர்பாக கோவில் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தினார்.

7 பேர் மீது வழக்கு

அதன்பேரில் சூரங்குடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அனுமதியின்றி எருது கட்டும் போட்டியில், 23 காளைகளை விட்டு நிகழ்ச்சி நடத்தியது தெரியவந்து உள்ளது. இதனை தொடர்ந்து பல்லாக்குளம் முனீஸ்வரன் கோவில் விழா குழு மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் 7 பேர் மீது விலங்குகளை துன்புறுத்துதலை தடுத்தல் சட்டம் 1960-ன் படியும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 143-ன் கீழ் வழக்கு தொடரப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story