பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்பவர்கள் மீது நடவடிக்கை
திருக்கோவிலூர் ஒன்றியத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்பவர்கள் மீது நடவடிக்கை பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள செட்டித்தாங்கல் கிராமத்தில் திருக்கோவிலூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் எம்.அறிவழகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் சங்கர், சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பார்வையாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். மாவட்ட பார்வையாளர் ராஜ்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் வி.அருள், தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளரும், திருக்கோவிலூர் தொழில் அதிபருமான ஆர்.கார்த்திகேயன், மாவட்ட துணை தலைவர் சத்தியசீலன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்தில் திருக்கோவிலூர் ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பொதுச்செயலாளர்கள் ஜெயதுரை, ராஜேஷ், மாவட்ட செயலாளர்கள் ராதிகாகாந்தச்செல்வன், எஸ்.டி.புவனேஸ்வரி, ஹரி, ஒன்றிய முன்னாள் தலைவர் முருகன், துணை தலைவர்கள் முத்துவேல், விஜயகாந்த், முருகன், ஒன்றிய செயலாளர்கள் ஆட்டோ சுப்புராயன், பழனிச்சாமி, ஆறுமுகம், மலர்க்கொடி, அரசு தொடர்பு மாவட்ட செயலாளர் கொளஞ்சியப்பன், சுகன்யா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.