பருத்தி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
பருத்தி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
தோகைமலை அருகே உள்ள புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் சார்பாக பருத்தி சாகுடி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் நடந்தது. இதற்கு வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி திரவியம் தலைமை தாங்கி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பருத்தி ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட புதிய ரகமான பருத்தி கோ 17 குறித்து முதல்நிலை செயல் விளக்கம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பருத்தி கோ 17 என்ற ரகமானது 125 நாட்கள் முதல் 130 நாட்களுக்குள் மகசூல் பெறக்கூடிய குறைந்த வயது உடையது ஆகும். மேலும் இந்த ரகம் அடர் நடவு முறைக்கு ஏற்றதாகவும் உள்ளது. ஏற்கனவே விவசாயிகள் நடைமுறையில் உள்ள ரகத்தை காட்டிலும் 18 சதவீதம் கூடுதலாக மகசூல் தரக்கூடியது ஆகும். இதேபோல் பருத்தியை தாக்கக்கூடிய முக்கிய பூச்சிகளுக்கு குறைவான நோய் எதிர்ப்பு திறன் கொண்டது எனவும் எடுத்து கூறப்பட்டது. இதில் விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கெர்ணடனர்.