விதை நேர்த்தி குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம்


விதை நேர்த்தி குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
x

விதை நேர்த்தி குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் உதவி இயக்குனர் ராஜசேகரன் முன்னிலையில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள், கிராமங்களில் 75 நாட்கள் தங்கி விவசாயிகளுடன் நேரடி அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக, விவசாயிகள் பயன் பெரும் வகையில் உயிர் உரம் மற்றும் உயிரியல் முறை கட்டுப்பாடு கொண்டு விதை நேர்த்தி குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர். மேலும் அதன் பயன்களையும், பயன்படுத்தும் முறை பற்றியும், விவசாயிகளின் சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் விரிவாக விவசாயிகளுக்கு எடுத்து கூறினர்.


Next Story