பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் சேர்க்க மேலாண்மைக்குழு மூலம் நடவடிக்கை
பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் சேர்க்க மேலாண்மைக்குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய கூட்டப்பொருளாக பள்ளி செல்லாக் குழந்தைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் ஒரு மாதத்தில் 15 நாட்கள் அல்லது அதற்கு மேல் வருகை தராத 1334 மாணவர்கள் விவரம் உரிய பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர தீர்வுகள் முன்மொழியப்பட்டது.
ஒவ்வொரு மாணவரும் வருகை இல்லாததிற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் கேட்டறியப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கவும், மற்ற துறைகளின் உதவிகள் தேவைப்படும் குழந்தைகளுக்கு தீர்மானத்தின் அடிப்படையில் மாவட்ட அலுவலகம் வாயிலாக தேவையான உதவிகள் வழங்கப்பட்டு இடைநின்ற மாணவர்கள் அனைவரையும் 100 சதவீதம் மீண்டும் பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டது.