கடனுக்கான மானியத்தொகை பயனாளிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை கலெக்டர் தகவல்


கடனுக்கான மானியத்தொகை பயனாளிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 23 July 2023 4:23 PM IST)
t-max-icont-min-icon

கடனுக்கான மானியத்தொகையினை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

சிவகங்கை

சிவகங்கை

கடனுக்கான மானியத்தொகையினை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

குறைதீர்க்கும் கூட்டம்

சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் ஜினு, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் தனபாலன், அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசும்போது, வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், நுண்ணீர் பாசன குழாய் மாற்ற ேவண்டும், ஆழ்குழாய் கிணறு அமைத்து தர வேண்டும், வரத்துக்கால்வாய் மற்றும் வரத்துக்கண்மாய்களை தூர்வார வேண்டும், மிளகாயை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும், கால்நடைகளை பரிசோதிக்கும் ஸ்கேன் எந்திரம் அமைக்க வேண்டும், மானியத்தில் ஆடு, மாடு கொட்டகை அமைக்க வேண்டும், புதிய கால்நடை மருந்தகம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.

மானியத்தொகை

இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

விவசாயிகளுக்கு சீரான முறையில் மின் வினியோகம் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைத்திடவும், வங்கிகளின் மூலம் கடன் உதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த தொழில் தொடங்கிடவும், கடனுக்குரிய மானியத்தொகையை தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடிநீர் மட்டத்தை பாதுகாத்திடவும், நீர்நிலைகளில் கருவேல மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

1 More update

Next Story