கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விதிமீறலில் ஈடுபட்டால் வாகன உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் எச்சரிக்கை

கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விதிமீறலில் ஈடுபட்டால் வாகன உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 Jun 2023 2:37 AM IST (Updated: 2 Jun 2023 11:48 AM IST)
t-max-icont-min-icon

கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் விதிமீறலில் ஈடுபட்டால் வாகன உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் விதிமீறலில் ஈடுபட்டால் வாகன உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாகன உரிமம் ரத்து

மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றியோ அல்லது உரிய அனுமதி சீட்டுகளோ இல்லாமல் வருகின்ற வாகனங்களை சிறப்பு குழு தனி தாசில்தார்கள், போலீசார் மற்றும் மதுரை மண்டல பறக்கும் படை துணை இயக்குனர் கொண்ட குழுவினரால் தினமும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. விதி மீறல்களில் ஈடுபடும் வாகன உரிமையாளர்களின் வாகன உரிமம் ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அபராத தொகை

அந்த வகையில் குமரி மாவட்டத்தில் போலீசார் மூலம் 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.10 லட்சத்து 47 ஆயிரத்து 710 அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டல பறக்கும் படை மூலம் 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்து 100 அபராதத் தொகையும், தனி தாசில்தார்கள் தலைமையிலான சிறப்பு குழுக்கள் மூலம் 29 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.42 லட்சத்து 5 ஆயிரத்து 710 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story