குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் நடவடிக்கை

குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.
கோவை
குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.
குழந்தை தொழில் ஒழிப்பு
குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பாக கோவை மண்டல அளவிலான கருத்தரங்கு தொழி லாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் கோவை நவ இந்தியா அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இதற்கு கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கி பேசியதாவது:-
குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பாக ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட் டங்களை சேர்ந்த அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்கும் கருத்தரங்கு இதுவாகும்.
குழந்தை தொழிலாளர் சட்டப்படி 14 வயதுக்குட்பட்ட குழந்தை களை எவ்விதமான தொழிலிலும் ஈடுப்படுத்த கூடாது, 18 வயதுக் குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்த கூடாது.
குழந்தை தொழிலாளர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்தும் நிறுவனத்தின் மீது குறைந்த பட்சம் ரூ.20 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கண்காணிக்க வேண்டும்
தமிழ்நாடு அதிக அளவு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக விளங்கு கிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2016 சட்டத் திருத்தத்திற்கு பிறகு குழந்தை தொழிலாளர் முறை கட்டுப்படுத்தப் பட்டு உள்ளது. இந்த முறையை ஒழிக்க பள்ளிகளில் வருகையை கண்காணிக்க வேண்டும்.
தொடர்ச்சியாக பள்ளிக்கு வராத குழந்தைகளின் விவரங்களை சேகரிக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் ஏதாவது தொழிற் சாலைகளில் வேலை செய்தால் அவர்களை மீட்டு, அரசின் திட்டங்கள் மூலம் வாழ்வாதார பாதுகாப்பு அளிப்பதுடன், தொடர் கல்வி வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
1098-ல் புகார் தெரிவிக்கலாம்
குடும்ப சூழ்நிலை மட்டுமின்றி ஒரு சில இடங்களில் கட்டாயப் படுத்தி குழந்தைகளை தொழிலாளராக பணி அமர்த்துவார்கள். இது குறித்து தகவல் அறிந்த உடன் மிக கவனமாக செயல்பட்டு குழந்தைகளை மீட்க வேண்டும்.
குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தை தொழிலாளர் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் (1098), வலைதளத்திலும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கில் தமிழ்நாடு நீதித்துறை பயிலக துணை இயக்குனர் எஸ்.பி.ரிஷிரோஷன், தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் டி.தமிழரசி, இணை ஆணையர் லீலாவதி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க துணை இயக்குனர் எம்.கலைமதி, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் டி.வி.விஜய குமார், தமிழ்நாடு கூட்டணி நிறுவன உறுப்பினர் பி.பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






