விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்தால் நடவடிக்கை


விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்தால் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 March 2023 12:28 AM IST (Updated: 28 March 2023 1:10 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சதாசிவம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலூர்


கடலூர் மாவட்டத்தில் மின் விபத்துகளை தவிர்க்கும் வகையிலும், மின்விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் மின்வாரியம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே காடுகள் மற்றும் காப்பு காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் மான்கள், மயில்கள் மற்றும் காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க, அதன் உரிமையாளர்கள் சட்டவிரோதமாக மின்வேலி, கம்பி வலைகள் அமைக்கின்றனர்.

அப்படி பயிர்களை காப்பாற்ற மின் வேலி அமைப்பதன் மூலம், அதை அறியாத மக்கள் மற்றும் வன விலங்குகள் மின் விபத்துக்கு உள்ளாகிறது.

நடவடிக்கை

எனவே விவசாய நிலத்தில் மின் வேலி அமைக்க வேண்டாம். விவசாய நிலத்தில் மின் வேலி அமைப்பது கிரிமினல் குற்றம். இதை மீறும் பட்சத்தில் இந்திய தண்டனை சட்டம் மின்சார பிரிவின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story