குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
வேதாரண்யம், வேளாங்கண்ணி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
வேதாரண்யம், வேளாங்கண்ணி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்
மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்
நாகையில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் ராம்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
சோழன்(தி.மு.க.):- வேதாரண்யம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். ்.
குடிநீர் தட்டுப்பாடு
கவுசல்யா(தி.மு.க.):- விழுந்தமாவடி அரசு ஆஸ்பத்திரி ஆய்வகத்திற்கு நிரந்தர ஆய்வக தொழில்நுட்ப வல்லுனரை நியமிக்க வேண்டும். சேதமடைந்த சாலைகளை சீர் செய்ய நிதி ஒதுக்க வேண்டும். வேளாங்கண்ணி, சின்னதும்பூர் சோழவித்தியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிவாரணம் வழங்க வேண்டும்
சரபோஜி(இந்திய.கம்யூ):-நிதிப்பற்றாக்குறை காரணமாக மெதுவாக நடக்கும் வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு, உரிய நிதியை உடனே வழங்கி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பச்சைபயறு, நிலக்கடலை பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
விஜயபாரதி(தி.மு.க.):- அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ெரயில் சீர்காழியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. முடிவில் துணைத்தலைவர் அஜிதா நன்றி கூறினார்.