பதிவு செய்யாத விடுதிகள் மீது நடவடிக்கை


பதிவு செய்யாத விடுதிகள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 15 May 2023 6:45 PM GMT (Updated: 15 May 2023 6:46 PM GMT)

பதிவு செய்யாத விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

கடலூர்

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மாவட்டத்தில் செயல்படும் மகளிர் மற்றும் குழந்தைகள் இல்லங்கள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள் அரசு உரிமம் பெற்று செயல்படுத்திட கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இல்லங்கள் செயல்படுவதற்கான அரசு உரிமம் பெறுதல், உரிமம் புதுப்பித்தல் போன்றவைகளுக்கு அரசு இணையதள முகவரியான www.tnswp.com-ல்பதிவு செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து அரசு உரிமம் மற்றும் புதுப்பித்தல் பதிவு செய்த நகலினை மாவட்ட சமூக நல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின் ரோடு என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட இணையதளம் வழியாக பதிவு செய்யாமல் செயல்படுத்தப்படும் இல்லங்கள் மற்றும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story